சீவக சிந்தாமணி 2821 - 2825 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2821 - 2825 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2821. பெரிய வாள் தடம் கண் செவ்வாய்ப் பிறர் மனை பிழைக்கும் மாந்தர்
மரீஇ அவாய்ப் புறம் சொல் கூர் முள் மத்திகைப் புடையும் அன்றி
ஒருவர் வாய் உமிழப் பட்ட தம்பலம் ஒருவர் வாய்க் கொண்டு
அரியவை செய்ப வையத்து ஆண் பிறந்தார்கள் அன்றே

விளக்கவுரை :

2822. ஒழுக்கமே அன்றித் தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும்
புழுப் பயில் தேனும் அன்றிப் பிறவற்றின் புண்ணும் மாந்தி
விழுப் பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார்
பழித்தன ஒழித்தல் சீலம் பார்மிசை அவர்கட்கு என்றான்

விளக்கவுரை :

[ads-post]

தானம்

2823. நல் நிலத்து இட்ட வித்தின் நயம் வர விளைந்து செல்வம்
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அருங் கொடையும் பேசின்
புன் நிலத்து இட்ட வித்தின் புற்கு என விளைந்து போகம்
மின் எனத் துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே

விளக்கவுரை :

2824. ஐவகைப் பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டுப்
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
செய்தவம் நுனித்த சீலக் கனை கதிர்த் திங்கள் ஒப்பார்

விளக்கவுரை :

2825. வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர் தொறும் செத்தினாலும்
பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்து அடி பணிந்த போதும்
தூக்கி இவ் இரண்டும் நோக்கித் தொல் வினை என்று தேறி
நாச் செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books