சீவக சிந்தாமணி 2866 - 2870 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2866 - 2870 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2866. அணி சேர் இடக்கை விரலால் வலத் தோள்
மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையாப்
பணியா முடியால் பணிந்தான் இளையோன்

விளக்கவுரை :

2867. கிளைப் பிரிவு அருஞ் சிறை இரண்டும் கேட்டியேல்
வினளக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு எனத்
திளைக்கும் மா மணிக் குழை சுடரச் செப்பினான்
வளைக் கையார் கவரி கொண்டு எறிய மன்னனே

விளக்கவுரை :

[ads-post]

2868. அறம் பெரிய கூறின் அலங்கல் அணி வேலோய்
மறம் புரி கொள் நெஞ்சம் வழியாப் புகுந்து ஈண்டிச்
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
உறும் பெரிய துன்பம் உயிர்க் கொலையும் வேண்டா

விளக்கவுரை :

2869. மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும்
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர்
பொய் உரையும் வேண்டா புறத்து இடுமின் என்றான்

விளக்கவுரை :

2870. முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும்
விளைவு அரிய மா துயரம் வீழ் கதியுள் உய்க்கும்
களவு கடன் ஆகக் கடிந்திடுதல் சூதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books