சீவக சிந்தாமணி 2726 - 2730 of 3145 பாடல்கள்
2726. கைப் பழம் இழந்த மந்தி கட்டியங் காரன் ஒத்தது
இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான்
இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று
மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே
விளக்கவுரை :
2727. மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும்
கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2728. நல் வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும்
பல் பழ மணிக் கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ணப் பூத்துச்
செல்வப் பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது
ஒல்கிப் போம் பாவக் காற்றின் ஒழிக இப் புணர்ச்சி என்றான்
விளக்கவுரை :
2729. வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி
மாட்சி ஒன்றானும் இன்றி மயங்கினேற்கு இருளை நீங்கக்
காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று
தோட்டியால் தொடக்கப் பட்ட சொரி மதக் களிற்றின் மீண்டான்
விளக்கவுரை :
2730. கைந்நிறை எஃகம் ஏந்திக் கன மணிக் குழை வில் வீச
மைந் நிற மணி வண்டு ஆர்ப்ப வார்தளிர் கவரி வீச
மெய்ந் நெறி மகிழ்ந்து நின்றான் வேனில் வாய்க் காமன் ஒத்தான்
மொய்ந் நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2726 - 2730 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books