சீவக சிந்தாமணி 2976 - 2980 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2976 - 2980 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2976. கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் முழவு முத்து உரிஞ்சி மின்னச்
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக் கூறிற்று அன்றே

விளக்கவுரை :

2977. கூந்தல் அகில் புகையும் வேள்விக் கொழும் புகையும்
எந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே

விளக்கவுரை :

[ads-post]

2978. புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
கல்லா இளையர் கலங்காச் சிரிப்பு ஒலியும்
கொல் யானைச் சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே

விளக்கவுரை :

2979. பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே

விளக்கவுரை :

2980. தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கித்
தூம்பு ஆர் நெடுங் கைம்மாத் தீம் கரும்பு துற்றாவாய்
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறர் ஆய்க்
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books