சீவக சிந்தாமணி 2961 - 2965 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2961 - 2965 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2961. பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடுங் கண்
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப் பட்டீர்க்கு
இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ

விளக்கவுரை :

2962. செங்கச்சு இள முலையார் திண் கறைஊர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
பங்கயமே போல்வாளைப் பார்ப்பான் ஆய்ப் பண் அணைத்துத்
தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ

விளக்கவுரை :

[ads-post]

2963. புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ

விளக்கவுரை :

கோயில் விலாவணை

2964. கல்லோ மரனும் இரங்கக் கலுழ்ந்து உருகி
எல்லாத் திசை தோறும் ஈண்டி இன மயில் போல்
சொல்லாத் துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
அல்லாந்து அகன் கோயில் ஆழ்கடல் போல் ஆயிற்றே

விளக்கவுரை :

2965. பூப் பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
நீப்பிர் எனப் புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
ஏப் பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரைக்
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books