சீவக சிந்தாமணி 2921 - 2925 of 3145 பாடல்கள்
2921. இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்னப்
பொன் அரிய கிண்கிணியும் பூஞ் சிலம்பும் ஏங்க
மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார்
விளக்கவுரை :
2922. கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண்
இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
உலவும் மனம் வைத்து உறுதி கேண்மின் இது என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2923. வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி
வேய் அழத் திரண்ட மென் தோள் வெம் முலைப் பரவை அல்குல்
தோய் பிழி அலங்கலார் தம் தொல் நலம் தொலைந்து வாடிக்
காய் அழல் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை ஒத்தார்
விளக்கவுரை :
2924. கருங் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும் காலைப்
பெருங் குளத்து என்றும் தோன்றா பிறைநுதல் பிணை அனீரே
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந் தவம் தெரியின் மண் மேல்
மருங்கு உடையவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே
விளக்கவுரை :
2925. விட்டு நீர் வினவிக் கேள்மின் விழுத்தகை அவர்கள் அல்லால்
பட்டது பகுத்து உண்பார் இப் பார் மிசை இல்லை கண்டீர்
அட்டு நீர் அருவிக் குன்றத்து அல்லது வைரம் தோன்றா
குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2921 - 2925 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books