சீவக சிந்தாமணி 2666 - 2670 of 3145 பாடல்கள்
2666. அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி
உடுத்த பட்டு ஒளிப்ப ஒண்பொன் மேகலை ஒன்றும் பேசா
கிடப்ப மற்று அரசன் நோக்கிக் கெட்டது உன் துகில் மற்று என்ன
மடத்தகை நாணிப் புல்லி மின்னுச் சேர் பருதி ஒத்தான்
விளக்கவுரை :
2667. விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
அம் மலர் உரோமப் பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
செம் மலர்த் திருவின் அன்னார் சிகழிகைச் சேர்த்தினாரே
விளக்கவுரை :
[ads-post]
இருது நுகர்வு
2668. கார் கொள் குன்று அன கண் கவர் தோளினான்
நீர் கொள் நீர் அணி நின்று கனற்றலின்
வார் கொள் மென் முலை வம்பு அணி கோதையார்
ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே
விளக்கவுரை :
2669. முது வேனில்
வேனில் வாய்க் கதிர் வெம்பலின் மேல் நிலைத்
தேன் உலாம் குளிர்ச் சந்தனச் சேற்றிடைத்
தான் உலாய்த் தடம் மென் முலைத் தங்கினான்
பால் நிலாக் கதிர் பாய்தரு பள்ளியே
விளக்கவுரை :
2670. முழுதும் மெய்ந் நலம் மூழ்கலின் நீர் சுமந்து
எழுது கண் இரங்கப் புருவக் கொடி
தொழுவ போல் முரியச் சொரி பூஞ் சிகை
அழுவ போன்று அணி நித்திலம் உக்கவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2666 - 2670 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books