சீவக சிந்தாமணி 2841 - 2845 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2841 - 2845 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2841. பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடுங் குன்று அனானும்
காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்தத்
தாம் உற்றுக் கழிப்பர் தானம் இடையது செய்த நீரார்
ஏமுற்றுக் கரும பூமி இருநிதிக் கிழமை வேந்தே

விளக்கவுரை :

2842. அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த்
தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர்
மடங்கல் அம் சீற்றத் துப்பின் மான வேல் மன்னர் ஏறே

விளக்கவுரை :

[ads-post]

சீலப் பயன்

2843. செப்பிய சீலம் என்னும் திருமணி மாலை சூழ்ந்தார்
கப்பத்துள் அமரர் ஆவர் காட்சி இன் அமிர்தம் உண்டார்
ஒப்ப நீர் உலகம் எல்லாம் ஒரு குடை நிழற்றி இன்பம்
கைப் படுத்து அலங்கல் ஆழிக் காவலர் ஆவர் கோவே

விளக்கவுரை :

வீடு பேறு

2844. வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர்ப்
பாட்டரும் பனிமதி பழித்த முக் குடை
மோட்டு இரும் கொழுமலர்ப் பிண்டி மூர்த்தி நூல்
ஈட்டிய பொருள் அகத்து இயன்றது என்பவே

விளக்கவுரை :

2845. உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம்
தௌளிதின் அப் பொருள் தெளிதல் காட்சி ஆம்
விள் அற இருமையும் விளங்கத் தன் உளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books