சீவக சிந்தாமணி 2911 - 2915 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2911 - 2915 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2911. குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
அடி வழிப் படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்திக்
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்

விளக்கவுரை :

2912. சேல் நடந்தாங்கும் ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள் கண்
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
கால் நடந்த அனைய மான் தேர்க் காளையைக் காவல் மன்னன்
தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே

விளக்கவுரை :

[ads-post]

2913. கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங் கனிக் கோலச் செவ்வாய்
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
சீர் உடைச் செம் பொன் கண்ணிச் சிறுவனைச் செம் பொன் மாரி
பேர் அறைந்து உலகம் உண்ணப் பெரு நம்பி ஆக வென்றான்

விளக்கவுரை :

2914. தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனைத் தந்து போற்றி
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தி னானே

விளக்கவுரை :

2915. நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் நித்திலம் விளைந்து முற்றி
நலம் செய்த வைரக் கோட்ட நாறும் மும் மதத்த நாகம்
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books