சீவக சிந்தாமணி 2721 - 2725 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2721 - 2725 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2721. அளித்து இள மந்தி தன்னை ஆர்வத்தால் விடாது புல்லி
ஒளித்து ஒரு பொதும்பர்ச் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை மகிழ்ச்சி ஆர்ந்து
தளிர்த் தலைப் பொதும்பர் நீங்கித் தம் இனம் இரண்டும் சேர்ந்த
களித் தலைக் கூட்டம் காதல் மந்தி கண்டு இருந்தது அன்றே

விளக்கவுரை :

2722. பரத்தையர் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத்து அன்று தௌ நீர் ஆடி நீர் வம்மின் என்ன
உரைத்தது என் மனத்தில் இல்லை உயர் வரைத் தேனை உண்பார்
வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய்க் கொள்வார் யாவர் சொல்லாய்

விளக்கவுரை :

[ads-post]

2723. ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள்
நீங்கிற்றுச் சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்னத்
தூங்கித் தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று
தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத் தான் பழித்தது அன்றே

விளக்கவுரை :

2724. கண்ணினால் குற்றம் கண்டும் காதலன் தெளிப்பத் தேறிப்
பெண்மையால் பழித்த மந்தி பெரு மகிழ் உவகை செய்வான்
திண் நிலைப் பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறிப்
பண் உறு சுளைகள் கையால் பகுத்து உணக் கொடுத்தது அன்றே

விளக்கவுரை :

2725. இன் கனி கவரும் மந்தி கடுவனோடு இரிய ஆட்டி
நன் கனி சிலதன் உண்ண நச்சுவேல் மன்னன் நோக்கி
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான்
அன்புடை அரிவை கூட்டம் பிறன் உழைக் கண்டது ஒத்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books