சீவக சிந்தாமணி 2951 - 2955 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2951 - 2955 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2951. மாக் கவின் வளரத் தீண்டி மணி நகை நக்கு நாளும்
பூக் கவின் ஆர்ந்த பைந்தார் புனை மதுத் தேனொடு ஏந்தித்
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்

விளக்கவுரை :

2952. அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவளச் செந் நா
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2953. பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலைக் கண்கள் தம்மைப்
பேணி நீர் எழுதி ஓம்பிப் பேர் இன்பம் கொண்டு தந்தீர்
காண்மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்

விளக்கவுரை :

2954. சென்னி மேல் மிதித்த அம் செஞ் சீறடித் திருவில் வீச
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
இன்னகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்

விளக்கவுரை :

2955. வீங்கு பால் கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
தீம் கதிர்த் திங்கள் செந் தீச் சொரிந்ததால் திசைகள் எல்லாம்
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர் காளோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books