சீவக சிந்தாமணி 3141 - 3145 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3141 - 3145 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3141. புருவச் சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
உருவத் துடி இடையார் ஊடல் உப்பு ஆகத்
திருவின் திகழ் காமத் தேன் பருகித் தேவர்
பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார்

விளக்கவுரை :

3142. முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய்ச் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடுபால் விம்மிப்
பகடு பட அடுக்கிப் பண்ணவனார் தம் ஒளி மேல் நின்றால் போலும்
தகடு படு செம் பொன் முக் குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே

விளக்கவுரை :

[ads-post]

3143. ஓம் படை
முந் நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற
மெய்ந் நீர்த் திருமுத்து இருபத்து ஏழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
செந் நீர்த் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இந் நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூந் தாமரையாள் காப்பாளாமே

விளக்கவுரை :

3144. செந்தாமரைக்குச் செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
அந் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்திச்
சிந்தா மணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தா விளக்குச் சுடர் நல் மணி நாட்டப் பெற்றே

விளக்கவுரை :

3145. செய் வினை என்னும் முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேம் கொள்
மைவினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
மொய்வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொல் பூக் கை தொழுது ஏத்தினனே

விளக்கவுரை :

வாழ்த்து

3146. திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books