சீவக சிந்தாமணி 2756 - 2760 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2756 - 2760 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2756. அழிதல் இன்றி அங்கு அருநிதி இரவலர்க்கு ஆர்த்தி
முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும்
வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடிக்
கெழீஇ யினாரொடும் கிளை அழக் கெடுதலும் கெடுமே

விளக்கவுரை :

2757. கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய்
வடி கொள் கண்ணியர் மனம் குழைந்து அநங்கன் என்று இரங்கக்
கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த
விடையில் செல்வுழி விளியினும் விளியும் மற்று அறி நீ

விளக்கவுரை :

[ads-post]

2758. எரி பொன் மேகலை இலங்கு அரிச் சிலம்பொடு சிலம்பும்
அரி பொன் கிண்கிணி அணி இழை அரிவையர்ப் புணர்ந்து
தெரிவு இல் போகத்துக் கூற்றுவன் செகுத்திடச் சிதைந்து
முரியும் பல்சன முகம் புடைத்து அகம் குழைந்து அழவே

விளக்கவுரை :

2759. கோதை மங்கையர் குவி முலைத் தடத்து இடைக் குளித்துக்
காதல் மக்களைக் கண்டு உவந்து இனிதினில் கழிப்பப்
பேது செய் பிணிப் பெரும் புலி பாய்ந்திடப் பிணம் ஆம்
ஓத மாக் கடல் உடை கலத்தவர் உற்றது உறவே

விளக்கவுரை :

2760. காமம் பைப் பயக் கழியத் தம் கடைப் பிடி சுருங்கி
ஊமர் போலத் தம் உரை அவிந்து உறுப்பினில் உரையாத்
தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி
ஈமம் ஏறுதல் ஒருதலை இகல் அமர் கடந்தோய்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books