சீவக சிந்தாமணி 2936 - 2940 of 3145 பாடல்கள்
2936. மந்திர மருந்து இவை இல்லையாய் விடின்
ஐந் தலை அரவினை யாவர் தீண்டுவார்
சுந்தரச் சுரும்பு சூழ் மாலை இல்லையேல்
மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார்
விளக்கவுரை :
2937. பொன் துலாம் பொன் அனீர் தருதும் பாகுநீர்
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
வென்று உலாம் வேல்கணீர் விழுத்தக்கீர்களே
விளக்கவுரை :
[ads-post]
2938. மெய்ப் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும்
கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா
ஐப் படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல்
பொய்ப் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால்
விளக்கவுரை :
2939. அனிச்சத்து அம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி
இனிச் செத்தாம் பிறந்த போழ்தே என்று நாம் இதனை எண்ணித்
தனிச் சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கிப்
பனித்தும் என்று உற்ற போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்
விளக்கவுரை :
2940. நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கிப்
பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
வேல் நிற மழைக் கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி
தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2936 - 2940 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books