சீவக சிந்தாமணி 2796 - 2800 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2796 - 2800 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2796. மாலைக் குடை மன்னர் வையம் அகற்றுவான்
காலைக் கதி துன்பம் காவல் பெருந் துன்பம்
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர் ஆயின்
வேலைக் கடலே போல் துன்பம் விளையுமே

விளக்கவுரை :

2797. ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மரச் சோலை
தான் சேர் பிணி என்னும் செந் தீக் கொடி தங்கிக்
கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாடத்
தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே

விளக்கவுரை :

[ads-post]

2798. கொட்டுப் பிடி போலும் கூனும் குறள் ஆமை
விட்டு நடப்பன போல் சிந்தும் விளைந்து சீ
அட்டும் உயவு நோய் அல்லாப் பிற நோயும்
பட்டார் உறு துன்பம் பன்னிச் சொலலாமோ

விளக்கவுரை :

2799. வேட்டன பெறாமை துன்பம் விழை நரைப் பிரிதல் துன்பம்
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம்
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான்

விளக்கவுரை :

தேவ கதித் துன்பம்

2800. திருவில் போல் குலாய தேம் தார்த் தேவர் தம் தன்மை செப்பின்
கருவத்துச் சென்று தோன்றார் கால் நிலம் தோய்தல் செல்லார்
உருவமேல் எழுதல் ஆகா ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி
பருதியின் இயன்றது ஒக்கும் பல் மலர்க் கண்ணி வாடா

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books