சீவக சிந்தாமணி 2966 - 2970 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2966 - 2970 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2966. கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறிச்
செழுநீர் மணிக் கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
அழுநீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே

விளக்கவுரை :

2967. பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து பல் மணியாழ் மழலை நீங்கிப்
புண்ணார் புனை குழலும் ஏங்கா புனை பாண்டில் இரங்கா வான்பூங்
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா
மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கிக் கோன் கோயில் மடிந்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2968. அணியார் மணி அரக்கு வட்டு அழுத்தி வைத்த அனைய செங்கண் மாத்தாள்
பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
பணியார் கமழ் கடாத்து அண்ணல் அரசுவாப் பண்ணார் பாய்மா
இணையாதும் இல்லாத கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே

விளக்கவுரை :

2969. கழித்த கடிப் பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும்
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி
விழித்து வியன் கோயில் பல் மீன் பரந்து இமைக்கும் பனியார் வானம்
பழித்துப் பசும் பொன் உலகு குடி போயிற்று ஒத்தது அன்றே

விளக்கவுரை :

2970. அழலார் சுரை எயிற்று வெம் சின ஐந் தலை சுமந்த வெகுளி நாகம்
நிழலார் திருமணியும் தேவர் திரு முடி மேல் நிலவி வீசும்
சுழல் ஆர் பசும் பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
கழலான் நகரம் அமுது கடை கடல் போல் கலங்கிற்று அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books