சீவக சிந்தாமணி 3001 - 3005 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3001 - 3005 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3001. திலக முக் குடைச் செல்வன் திருநகர்
பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
குலவு பல்லியம் கூடிக் குழுமி நின்று
உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே

விளக்கவுரை :

3002. கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
தேன் நிரைத்தன செம் பொன் நெடு மதில்
மேல் நிரைத்தன வெண் கொடி அக் கொடி
வான் உரிப்பன போன்று மணந்தவே

விளக்கவுரை :

[ads-post]

3003. கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும்
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று அரோ
காலம் உற்று உடன் கண் உற்ற போன்றவே

விளக்கவுரை :

3004. வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே

விளக்கவுரை :

3005. செய்ய தாமரைப் பூவினுள் தேம் கமழ்
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
ஐயம் செய்து அடு பால் நிறப் புள் இனம்
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books