சீவக சிந்தாமணி 2741 - 2745 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2741 - 2745 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2741. கருமக் கடல் கடந்த கை வலச் செல்வன்
எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் யாரே
எரி மலர்ச் சேவடியை ஏத்துவார் வான் தோய்
திரு முத்து அவிர் ஆழிச் செல்வரே அன்றே

விளக்கவுரை :

2742. வண்ண மா மலர் மாலை வாய்ந்தன
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து
அண்ணல் சேவடி அருச்சித்தான் அரோ
விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான்

விளக்கவுரை :

[ads-post]

அறவுரை

2743. இலங்கு குங்கும மார்பன் ஏந்து சீர்
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை
வலம் கொண்டு ஆய் மலர்ப் பிண்டி மா நிழல்
கலந்த கல் மிசைக் கண்டு வாழ்த்தினான்

விளக்கவுரை :

2744. உரிமை தன்னொடும் வலம் கொண்டு ஓங்கு சீர்த்
திருமகன் பணிந்து இருப்பச் செய்தவர்
இரு நிலம் மனற்கு இன்பமே எனப்
பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான்

விளக்கவுரை :

2745. தெருளலேன் செய்த தீவினை எனும்
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
அருளுமின் எனக்கு அடிகள் என்றனன்
மருள் விலங்கிய மன்னர் மன்னனே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books