Showing posts with label முடத்தாமக் கண்ணியார். Show all posts



பொருநராற்றுப்படை 241 - 248 of 248 அடிகள்

241. புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.

விளக்கவுரை :

பொருநராற்றுப்படை முற்றும்



பொருநராற்றுப்படை 221 - 240 of 248 அடிகள்

221. நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினைக் கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்பத்
தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்

விளக்கவுரை :

231. அன்னோன் வாழி வென்வேற் குருசில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக்
கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்

விளக்கவுரை :



பொருநராற்றுப்படை 201 - 220 of 248 அடிகள்

201. பொற் கொன்றை மணிக் காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவத்
திற வருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின்
ஒங்கு திரை யொலிவெரீ இத்
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோட் டெங்கின் குலை வாழைக்
கொழுங் காந்தண் மலர் நாகத்துத்
துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக்

விளக்கவுரை :

211. யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர்ப் பல பெயரத்
தேனெய் யொடு கிழங்கு மாறியோர்
மீனெய் யொடு நறவு மறுகவும்
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர்

விளக்கவுரை :



பொருநராற்றுப்படை 181 - 200 of 248 அடிகள்

181. றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண்
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப்

விளக்கவுரை :

191. பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத்
தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப்

விளக்கவுரை :
Powered by Blogger.