சீவக சிந்தாமணி 2521 - 2525 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2521 - 2525 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2521. சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழித் தேன்
இனம் கவர்ந்து உண இலிற்றும் மும் மதத்து
அநந்தன் அன்ன கை யானை ஏறினான்
குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே

விளக்கவுரை :

2522. இரும் பிடி நூறு சூழ இறு வரை நின்றதே போல்
கரும்பொடு காய் நெல் துற்றிக் கருப்புரக் கந்தில் நின்ற
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானைப்
பெருந் தகைப் பிணையல் மன்னர் முடிமிதித்து ஏறினானே

விளக்கவுரை :

[ads-post]

2523. சட்டகம் பொன்னில் செய்து தண் கதிர் வெள்ளி வேய்ந்து
வட்ட நல் வைரம் வாய்ப்ப நிரைத்து மேல் மணிகள் சேர்த்திச்
சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர்ப்
பட்டவான் பவளக் காம்பின் குடை நிழல் பருதி ஒத்தான்

விளக்கவுரை :

2524. மடல் பனைக் குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடைக் களிறு ஏறித் திங்கள் பொழிகதிர்க் குப்பை அன்ன
எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்பக்
கடல் படை வெள்ளம் சூழக் காவலன் வீதி சேர்ந்தான்

விளக்கவுரை :

2525. அடி நிலம் உறுதல் நாணி அருவருத்து அமரின் ஆலித்து
இடு மயிர் சிறகர் ஆக எழுந்து மேல் பறப்ப போலப்
படு மழைத் துளியின் பாய்மாப் பரந்தன நிரந்த பொன் தேர்
இடைநிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books