சீவக சிந்தாமணி 2566 - 2570 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2566 - 2570 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2566. உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை
வலமருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி
நிலமகள் கணவன் வேந்தர் குழாத்து இடை நிவந்து இருந்தான்
புலமகள் புகழப் பொய்தீர் பூ மகள் புணர்ந்து மாதோ

விளக்கவுரை :

2567. எத் துணைத் தவம் செய்தான் கொல் என்று எழுந்து உலகம் ஏத்த
வித்திய புகழினாற்கு விருந்து அரசு இயற்றி நாடும்
ஒத்தன நல்கித் தன்னை உழந்தனள் வளர்த்த தாய்க்குச்
சித்திரத் தேவிப் பட்டம் திருமகன் நல்கினானே

விளக்கவுரை :

[ads-post]

2568. இனக் களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்தத்
தனக்கு இளையானை நாட்டித் தான் தனக்கு என்று கூறிச்
சினக் களி யானை மன்னர் மகளிரைச் சேர்த்தி நம்பன்
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான்

விளக்கவுரை :

2569. ஆழ் கடல் வையத்து இல்லா அருநிதி அரசு நல்ல
சூழ் மணி ஆழி செம் பொன் சூட்டொடு கண்ணி காதல்
தோழர்கட்கு அருளித் தொல்லை உழந்தவர் தம்மைத் தோன்ற
வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித் தானே

விளக்கவுரை :

2570. வளர்த்த கைத் தாயர் தம்மை வருக என அருளித் தங்கள்
கிளைக்கு எலாம் சிறப்புச் செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர்
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக்
கொளக் கொடுத்து அயா உயிர்த்தான் கொற்றவன் என்ப அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books