சீவக சிந்தாமணி 2561 - 2565 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2561 - 2565 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2561. திரு மறு மார்பினை திலகமுக் குடையினை
அருமறை தாங்கிய அந்தணர் தாதையை
அருமறை தாங்கிய அந்தணர் தாதை நின்
எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும்

விளக்கவுரை :

2562. உலகு உணர் கடவுளை உருகெழு திறலினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியினை
நிலவிரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின்
அலர் கெழு மரை மலர் இணை அடி தெழுதும்

விளக்கவுரை :

[ads-post]

2563. மறு அற உணர்ந்தானை மலம் அறு திகிரியை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ நின்
நறை விரி மரை மலர் நகும் அடி தொழுதும்

விளக்கவுரை :

2564. நந்தா விளக்குப் புறம் ஆக என நான்கு கோடி
நொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
கந்து ஆர் கடாத்த களிறும் கொடித் தேர்கள் நூறும்
செந்தாமரை மேல் நடந்தான் அடி சேர்த்தினானே

விளக்கவுரை :

2565. வாடத மாலை மணி மாலை பொன் மாலை முத்த
நீடு ஆர மாலை நிழல் மாண்ட பவழ மாலை
மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் பொற்ப ஏற்றிக்
கூடார்க் கடந்தான் வலம் கொண்டு இடம் சென்று புக்கான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books