சீவக சிந்தாமணி 2556 - 2560 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2556 - 2560 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2556. பெருமுழங்கு திரை வரைகள் நீந்திப் பிணி உறினும்
திரு முயங்கல் இல்லை எனில் இல்லை பொருள் ஈட்டம்
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ

விளக்கவுரை :

2557. நஞ்சு குடித்தாலும் நவை இன்று தவம் நின்றால்
அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால்
குஞ்சரத்தின் கோட்டு இடையும் உய்வர் தவம் மிக்கார்
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2558. முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும்
கரை வாய முத்து ஈன்று கானல் மேயும் கடல் சேர்ப்பன்
உரை வாய நகர் பரவப் போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே

விளக்கவுரை :

2559. அருகு மயில் அகவ அன்னம் ஏங்கக் குயில் கூவக்
குருகு பொறை உயிர்க்கும் கொடு முள் தாழை வெண் தோட்டு
முருகு பொறை உயிர்க்கும் மொய் பூங்காவில் படை நீக்கித்
திருகு கனை கழலான் செம் பொன் கோயில் சேர்ந்தானே

விளக்கவுரை :

2560. திறந்த மணிக் கதவம் திசைகள் எல்லாம் மணம் தேக்கி
மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து
பிறந்தேன் இனிப் பிறவேன் பிறவா தாயைப் பெற்றேன் என்று
இறைஞ்சி முடிதுளக்கி ஏத்திக் கையால் தொழுதானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books