சீவக சிந்தாமணி 2551 - 2555 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2551 - 2555 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2551. கொழித்து இரை ஓத வேலிக் குமரனைப் பயந்த நங்கை
விழுத் தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார்
பிழிப்பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள்
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார்

விளக்கவுரை :

2552. சாந்து அகம் கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லிச்
சேர்ந்து எழும் நங்கை மாரே திரு நங்கை மார்கள் அல்லார்
கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான்
போந்த அந் நங்கை மார்கள் பொய்ந் நங்கைமார்கள் என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2553. இடம் பட அகன்று நீண்ட இருமலர்த் தடம் கண் என்னும்
குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளைக் கொம்பின்
உடம்பு எலாம் கண்கள் ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப
அடங்க வாய் வைத்திட்டு ஆரப் பருகியிட்டு ஈமின் என்பார்

விளக்கவுரை :

2554. முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானைத்
தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன்கைச்
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி
நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார்

விளக்கவுரை :

2555. இந் நகரப் புறம் காட்டில் இவன் பிறந்த வளளாறும்
தன் நிகர் இல் வாணிகன் இல் தான் வளர்ந்த வாறும்
கைந் நிகர் இல் வேந்தர் தொழப் போந்ததுவும் கண்டால்
என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books