பழமொழி நானூறு 131 - 135 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 131 - 135 of 400 பாடல்கள்

131. நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்
பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! 'யாருளரோ
தங்கன்று சாக்கறப் பார்'.

விளக்கவுரை :

132. தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.

விளக்கவுரை :

133. தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பனப் பட்டார்க்(கு)
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
'மறையார் மருத்துவர்க்கு நோய்'.

விளக்கவுரை :

134. முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
'கெட்டார்க்கு நட்டாரோ இல்'.

விளக்கவுரை :

15. நட்பில் விலக்கு

135. கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணும் துணைக்காக்கும் கூற்று'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books