பழமொழி நானூறு 136 - 140 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 136 - 140 of 400 பாடல்கள்

136. எயப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!
அச்சிடை இட்டுத் திரியின் அதுவன்றோ
'மச்சேற்றி ஏணி களைவு.'

விளக்கவுரை :

137. பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'.

விளக்கவுரை :

138. இடையீ(டு) உடையார் இவர்அவரோ(டு) என்று
தலையாயர் ஆராய்ந்தும் காணார் - கடையாயர்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
'பின்னின்னா பேதையார் நட்பு.'

விளக்கவுரை :

139. தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா
'கானகத்து உக்க நிலா'.

விளக்கவுரை :

140. கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
'விண்டற்கு விண்டல் மருந்து'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books