ஐங்குறு நூறு
301 - 305 of 500 பாடல்கள்
31. செலவு அழுங்குவித்த பத்து
301. மால்வெள் ளோத்திரத்து மையில்
வாலிணர்
அருஞ்சுரம்
செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை
யிறக்குவை யாயின்
மைவரை
நாட வருந்துவள் பெரிதே.
விளக்கவுரை :
302. அரும்பெருள் செய்வினை தப்பற்கும்
உரித்தே
பெருந்தோள்
அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய்
அயினோ நன்றே
மல்லம்
புலம்ப இவள்அழப் பிரிந்தே.
விளக்கவுரை :
303. புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
போகில்தனைத்
தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய
இனிய வாக
எம்மொடுஞ்
சென்மோ விடலை நீயே.
விளக்கவுரை :
304. கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர்ப்
பத்தல் யானை வெளவும்
கல்லதர்க்
கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங்
கூந்தல் புலம்பும்
வயமான்
தோன்றல் வல்லா தீமே.
விளக்கவுரை :
305. களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின
வருத்தம் பைதறு குன்றத்துச்
சுடர்தொடிக்
குறுமகள் இனைய
எனப்பயஞ்
செய்யுமோ விடலைநின் செலவே.
விளக்கவுரை :