ஐங்குறு நூறு 336 - 340 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 336 - 340 of 500 பாடல்கள்

336. அம்ம வாழி தோழி நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே.

விளக்கவுரை :

337. அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.

விளக்கவுரை :

338. அம்ம வாழி தோழி சாரல்
இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்
மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்
பிரிவருங் காலையும் பிரிதல்
அரிதுவல் லுநர்நம் காத லோரே.

விளக்கவுரை :

339. அம்ம வாழி தொழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலவர் சென்ற நாடே.

விளக்கவுரை :

340. அம்ம வாழி தொழி காதலர்
உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊரலர் எழவே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books