ஐங்குறு நூறு
281 - 285 of 500 பாடல்கள்
29. கிள்ளைப் பத்து
281. வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை
வாழிய பலவே ஒள்ளிழை
இரும்பல்
கூந்தல் கொடிச்சி
பெருந்தோள்
காவல் காட்டி யவ்வே.
விளக்கவுரை :
282. சாரல் புறத்த பெருங்குரல்
சிறுதினைப்
பேரமர்
மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச்
சிறுகிளி உன்னு நாட
அரிருள்
பெருகின வாரல்
கோட்டுமா
வாழங்கும் காட்டக நெறியே.
விளக்கவுரை :
283. வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
புன்புல
மயக்கத்து உழுத ஏஅனல்
பைம்புறச்
சிறுகிளி கடியும் நாட
பெரிய
கூறி நீப்பினும்
பொய்வலைப்
படூஉம் பெண்டுதவப் பலவே.
விளக்கவுரை :
284. அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக்
குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவை
நீள்புனங் கண்டும்
பிரிதல்
தேற்றாப் பேரன் பினவே.
விளக்கவுரை :
285. பின்னிருங் கூந்தல் நன்னுதல்
குறமகள்
மெல்தினை
நுவனை யுண்டு தட்டையின்
ஐவனச்
சிறுகிளி கடியும் நாட
வீங்குவளை
நெகிழப் பிரிதல்
யாங்குவல்
லுநையோ ஈங்கிவள் துறந்தே.
விளக்கவுரை :