ஐங்குறு நூறு
271 - 275 of 500 பாடல்கள்
28. குரக்குப் பத்து
271. அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின்
தோன்றும் நாடன் வேண்டின்
பல்பசுப்
பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள்
ஆகலின் நல்குமால் இவட்கே.
விளக்கவுரை :
272. கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
அருவரைத்
தீந்தேன் எடுப்பை அயலது
உருகெழு
நெடுஞ்சினைப் பாயும் நாடன்
இரவின்
வருதல் அறியான்
வரும்
வரும் என்பள் தோழியாயே.
விளக்கவுரை :
273. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
புந்தலை
மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை
நாட நீசெலின்
நின்நயத்து
உறைவி என்னினும் கழில்மே.
விளக்கவுரை :
274. மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
ஒன்கேழ்
வயப்புலி குழுமலின் வைரைந்துடன்
குன்றுயர்
அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன்
வாழி தோழியென்
மெல்தோள்
கவினும் பாயலும் கொண்டே.
விளக்கவுரை :
275. குரங்கின் தலிஅவன் குருமயிர்க்
கடுவன்
சூரலஞ்ச்
சிறுகோல் கொண்டு வியலறை
மாரி
மொக்குள் புடைக்கும் நாட
யாம்நின்
நயத்தனம் எனினும்எம்
ஆய்நலம்
வாடுமோ அருளுதி எனினே.
விளக்கவுரை :