ஐங்குறு நூறு 381 - 385 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 381 - 385 of 500 பாடல்கள்

39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.

381. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே.

விளக்கவுரை :

382. புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்
திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனையிழை மகளிர்ப் பயந்த
மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.

விளக்கவுரை :

383. கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற
நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே
பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே.

விளக்கவுரை :

384. சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்
நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர்
ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.

விளக்கவுரை :

385. கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நல்தோள் நயந்துபா ராட்டி
என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books