ஐங்குறு நூறு 351 - 355 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 351 - 355 of 500 பாடல்கள்

36. வரவுரைத்த பத்து

351. அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப்
பல்லிதல் உண்கண் மடந்தைநின்
நல்லெழில் அல்குல் வாடிய நிலையே.

விளக்கவுரை :

352. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழிநம் காத லோரே.

விளக்கவுரை :

353. எரிக்கொடி க¨லை இய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.

விளக்கவுரை :

354. ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன்வந் தனரே
தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே.

விளக்கவுரை :

355. திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரும்
நெறிவிலங்கு அதர கானத் தானே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books