ஐங்குறு நூறு
256 - 260 of 500 பாடல்கள்
256. குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்படு
கூந்தல் தந்தழைக் கொடிச்சி
வளையள்
முளைவாள் எயிற்றள்
இளையள்
ஆயினும் ஆரணங் கினனே.
விளக்கவுரை :
257. குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன்
பெற்ற வெள்வளைக் குறுமகள்
ஆயரி
நெடுங்கள் கலிழச்
சேயதால்
தெய்யநீ பிரியும் நாடே.
விளக்கவுரை :
258. குன்றக் குறுவன் காதல் மடமகள்
அணிமயில்
அன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை
நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம்
ஆயினோம் நன்றே
இன்னும்
ஆனாது நன்னுதல் துயிரே.
விளக்கவுரை :
259. குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற
வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை
கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச்
செய்த ஈர்நறுங் கையள்
மலர்ந்த
காந்தள் நாறிக்
கவிழ்ந்த
கண்ணள்எம் அணங்கி யோளே.
விளக்கவுரை :
260. குன்றக் குறவன் காதல் மடமகள்
மெந்தோள்
கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப்
பைங்கிளி ஒப்பலர்
புன்புல
மயக்கத்து விளைந்தன தினையே.
விளக்கவுரை :