ஐங்குறு நூறு
466 - 470 of 500 பாடல்கள்
466. வேந்துவிடு விழுத்தொழில் எய்தி
ஏந்துகோட்டு
அண்ணல்
யானை அரசுவிடுத்து இனியே
எண்ணிய
நாள்அகம் வருதல் பெண்ணியல்
காமர்
சுடர்நுதல் விளங்கும்
தேமொழி
அரிவை தெளிந்திசின் யானே.
விளக்கவுரை :
467. புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து
இனையல்
வாழியோ இகுளை வினைவயின்
சென்றோர்
நீடினர் பெரிதெனத் தங்காது
நம்மினும்
விரையும் என்ப
வெம்முரண்
யானை விறல்போர் வேந்தே.
விளக்கவுரை :
468. வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்
கார்தொடங்
கின்றே காலை இனிநின்
நேர்இறை
பணைத்தோட்கு ஆர்விருந் தாக
வருவர்
இன்றுநம் காத லோரே.
விளக்கவுரை :
469. பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல
நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு
அம்கண்
இருவிசும்பு அதிர ஏறொடு
பெயல்தொடங்
கின்றே வானம்
காண்குவம்
வம்மோ பூங்க ணோயே.
விளக்கவுரை :
470. இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும்பனி
அளை இய அற்சிரக் காலை
உள்ளார்
காதல ராயின் ஒள்ளிழை
சிறப்பொடு
விளங்கிய காட்சி
மறக்க
விடுமோநின் மாமைக் கவினே.
விளக்கவுரை :