கலித்தொகை 23 of 150 தொகைகள்



கலித்தொகை 23 of 150 தொகைகள்

23. இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்து இருத்தல்
நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே; இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்;

விளக்கவுரை :

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்,
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;

விளக்கவுரை :

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்,
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;

விளக்கவுரை :

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்.
சூடினர் இட்ட பூ ஓரன்னர்;

விளக்கவுரை :

என ஆங்கு,
யானும் நின் அகத்து அனையேன்; ஆனாது,
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே!

விளக்கவுரை :

கலித்தொகை, பெருங்கொடுங்கோன், கபிலர், kalithogai, perungodungoan, kabilar, ettu thogai, tamil books