ஐங்குறு நூறு 491 - 495 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 491 - 495 of 500 பாடல்கள்

50. வரவுச் சிரப்புரைத்த பத்து

491. காரெதிர் காலையாம் ஓவின்று நலிய
நொந்துநொந்து உயவும் உள்ளமொடு
வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே.

விளக்கவுரை :

492. நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

விளக்கவுரை :

493. ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க
மாதர் மான்பிணை மறியொடு மறுகக்
கார்தொடங் கின்றே காலை
நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே.

விளக்கவுரை :

494. வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்
தண்கமழ் புறவின் முல்லிஅ மலர
இன்புறுத் தன்று பொழுதே
நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே.

விளக்கவுரை :

495. செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்
புலம்தீர்ந்து இனிய வாயின புறவே
பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய
உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு
முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books