ஐங்குறு நூறு 456 - 460 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 456 - 460 of 500 பாடல்கள்

456. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்
வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்
அரும்பனி அளை இய கூதிர்
ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே.

விளக்கவுரை :

457. பெய்பன் நலிய உய்தல்செல் லாது
குருகினம் நரலும் பிரிவருங் காலைத்
த்.¤றந்தமை கல்லார் காதலர்
மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.

விளக்கவுரை :

458. துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்
அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென
மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே.

விளக்கவுரை :

459. மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
அரண்க டந்த சீர்கெழு தானை
வெல்போர் வேந்தனொடு சென்றா
நல்வய லூரன் நறுந்தண் மார்பே.

விளக்கவுரை :

460. பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்
இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும்
என்ஆகு வன்கொல் அளியென் யானே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books