ஐங்குறு நூறு 441 - 445 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 441 - 445 of 500 பாடல்கள்

45. பாசறைப் பத்து

441. ஐய ஆயின செய்யோள் களவி
கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென
நோய் நன்கு செய்தன் எமக்கே
யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

விளக்கவுரை :

442. பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின்

விளக்கவுரை :

443. நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுயர் அரண்பல வெளவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே.

விளக்கவுரை :

444. பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென்வேல் வேந்தன் பகைதணிந்து
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.

விளக்கவுரை :

445. புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்
துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
உள்லூதொறும் கலிழும் நெஞ்சம்
வல்லே எம்மையும் வரவிழைந் தனையே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books