ஐங்குறு நூறு
401 - 405 of 500 பாடல்கள்
41. செவிலி கூற்றுப் பத்து
401. மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன்
நடுவண னாக நன்றும்
இனிது
மன்றஅவர் கிடக்கை முனிவின்றி
நீல்நிற
வியலகம் கவைஇய
ஈனும்
உம்பரும் பெறலரும் குரைத்தே.
விளக்கவுரை :
402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன்
வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர்
முரற்கை போல
இனிதால்
அம்ம பண்புமா ருடைத்தே.
விளக்கவுரை :
403. புணர்ந்தகா தலியின் புதல்வன்
தலையும்
அமர்ந்த
உள்ளம் பெரிதா இன்றே
அகன்பெருஞ்
சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலில்
இன்னகை பயிற்றிச்
சிறுதேர்
உருட்டும் தளர்நடை கண்டே.
விளக்கவுரை :
404. வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
தானவன்
சிறுபுறம் கவையினன் நன்று
நறும்பூம்
தண்புற அணிந்த
குறும்பல்
பொறைய நாடுகிழ வோனே.
விளக்கவுரை :
405. ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக்
காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல
அணிந்த வைப்பின்
புறவணி
நாடன் புதல்வன் தாயே.
விளக்கவுரை :