ஐங்குறு நூறு
451 - 455 of 500 பாடல்கள்
46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
451. கார்செய் காலையொடு கையற்ப்
பிரிந்தோர்
தேர்தரு
விருந்தில் தவிர்குதல் யாவது
மாற்றருந்
தானை நோக்கி
ஆற்றவும்
இருத்தல் வேந்தனது தொழிலே.
விளக்கவுரை :
452. வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
கற்ங்குரல்
எழிலி கார்செய் தன்றே
பகைவெங்
காதலர் திறைதரு முயற்சி
மெல்தோள்
ஆய்கவின் மறையப்
பொன்புனை
பீரத்து அலர்செய் தன்றே.
விளக்கவுரை :
453. அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்
வெங்குரல்
புள்ளினம் ஒலிப்ப உதுக்காண்
கார்தொடங்
கின்றால் காலை அதனால்
நீர்தொடங்
கினவால் நெடுங்கணவர்
தேர்தொடங்
கின்றால் நம்வயி நானே.
விளக்கவுரை :
454. தளவின் பைங்கொடி தழீஇப் பையென
நிலவின்
அன்ன நேரும்பு பேணிக்
கார்நய்ந்து
எய்தும் முல்லை அவர்
தேர்நயந்து
உறையும் என் மாமைக் கவினே.
விளக்கவுரை :
455. அரசுபகை தணிய முரசுபடச் சினை இ
ஆர்குரல்
எழிலி கார்தொடங் கின்றே
அளியவோ
அளிய தாமேஎ ஒளிபசந்து
மின்னிழை
ஞெகிழச் சாஅய்த்
தொன்னலம்
இழந்த என் தடமெல் தோளே.
விளக்கவுரை :