Showing posts with label முல்லைப் பாட்டு. Show all posts



முல்லைப் பாட்டு 81 - 103 of 103 அடிகள்

81. நெடுஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து
மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து
பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல

விளக்கவுரை :

86. விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ,
ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர்
வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தாநையொடு

விளக்கவுரை :

91. விசயம் வெல்கொடி யுயர், வலனேர்பு
வயிரும் வளையு மார்ப்ப, வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்,
கோடற் குவிமுகை யங்கை யவிழத்,

விளக்கவுரை :

96. தோடார் தோன்றி குருதி பூப்பக்,
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மாடமா னுகள,
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின்

விளக்கவுரை :

101. முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு முற்றும்.



முல்லைப் பாட்டு 61 - 80 of 103 அடிகள்

61. வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு,
ளுடம்பி நுரைக்கு முரையா நாவிற்

விளக்கவுரை :

66. படம்புகு மிலேச்ச ருழையராக,
மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ,
தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து
பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்

விளக்கவுரை :

71. தேம்பாய் கண்ணி நவ்வலந் திருத்திச்
சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
துண்ணா துயங்கு மாசிந் தித்து
மொருகை பள்ளி யொற்றி யொருகை

விளக்கவுரை :

76. முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை,
யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து,

விளக்கவுரை :



முல்லைப் பாட்டு 41 - 60 of 103 அடிகள்

41. பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவில் லரண மரணமாக,
வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு,
குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்

விளக்கவுரை :

46. திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்க நந்துதொறு மாட்ட
நெடுநா வெண்மணி1 நிழத்திய2 நடுநா,

விளக்கவுரை :

51. ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
பெருமூ தாள ரேமஞ் சூழப்,
பொழுதளந் தறியும் பொய்யா மாக்க

விளக்கவுரை :

56. டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி,
"யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
குறுநீர்க் கன்ன லினைத்" தென்றிசைப்ப,
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து

விளக்கவுரை :
Powered by Blogger.