சீவக சிந்தாமணி 2586 - 2590 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2586 - 2590 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2586. அருவிலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கிச் சென்று
உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கிக் கோமான் அடி தொழுத பின்
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட
இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே

விளக்கவுரை :

2587. அடிகள் கண்டு ஆங்கு உவந்து அருளுக அநங்கமாலை அடி வீழ்ச்சி முன்
கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கிக் கோயில் சிறை வைத்த பின்
கடி செய் பைந்தார்க் கமழ் மாலை வேல் கந்துகற்குச் சிறுவ யான் இப்
படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம் பொன் செறிகழலினாய்

விளக்கவுரை :

[ads-post]

2588. என்ன நாளும் அரற்றப் பொறான் விடுப்பப் போகி இன மழைகள் மொய்த்து
அன்னம் துஞ்சும் அடிக் குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினைத்
துன்னி நம்பி உருவு தீட்டித் தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ
மன்னர் மன்ன மதி தோய் குடையாய் மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ

விளக்கவுரை :

2589. கண்கள் துஞ்சா கதிர் முத்தமே காலும் கை ஆர் வளை கழலுமால்
பண் கொள் சொல்லார் மாமை நீங்கிப் பைம் பொன் போர்த்த படா முலைகளும்
மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை வையக்கு எல்லாம் உடன் அறையவோ
பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ

விளக்கவுரை :

2590. அறன் நிழல் ஆய் உலகு அளிக்கும் நின் ஆர மாலை அணி வெண் குடைப்
புறன் நிழலின் அயலேனோ யான் புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல்
மறன் நிழல் மத யானையாய் வந்த என் தோழி வாமலேகை
திறன் அழியாமை இன்னே விடுத்து அருளுக தேர் வேந்தர் வேந்தனே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books