சீவக சிந்தாமணி 2591 - 2595 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2591 - 2595 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2591. புள்ளும் யாழும் குழலும் ஏங்கப் புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய
பள்ளிச் செம் பொன் படை அமளி மேல் மழலை மணி யாழ் தான் வெளவிக்
கொள்ளும் தீம் சொல் அலங்காரப் பூங் கொடியைப் புல்லி மணிக் குவட்டினை
எள்ளி வீங்கித் திரண்ட தோள் மேல் குழை வில் வீச இருந்தானே

விளக்கவுரை :

2592. அங் கை சேப்பக் குருகு இரங்க அலங்கல் அம் பூங் குழல் துயல் வர
மங்கை நல்லார் பவழ அம்மி அரைத்த சாந்தம் மலர் பெய் மாலை
பொங்கு தூமக் கொழு மென் புகை புரிந்த பஞ்சமுக வாசமும்
தங்கு தாம மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினாரே

விளக்கவுரை :

[ads-post]

2593. அருளும் ஆறு என்னை அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ எனத்
தெருளலான் செல்வக் களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங் கணை
உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை தோற்றினாளே

விளக்கவுரை :

2594. முறுவல் திங்கள் முக அரங்கின் மேல் முரிந்து நீண்ட புருவக் கைகள்
நெறியின் வட்டித்து நீண்ட உண் கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆடப்
பொறி கொள் பூஞ் சிலம்பு மேகலைகளும் புணர்ந்த இன்னியங்கள் ஆர்ப்ப வேந்தன்
அறியும் நாடகம் கண்டான் பைந்தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே

விளக்கவுரை :

2595. நால் மருப்பின் மத யானை நறிய பைந்தாமரை மடந்தையைத்
தேன் மதர்ப்பத் திளைத்து ஆங்கு அவன் திருவின் சாயல் நலம் கவர்ந்த பின்
ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே
வான் அகத்தும் நிலத்தும் இல்லா வண்ணம் மிக்க மணிப் பூணினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books