சீவக சிந்தாமணி 2596 - 2600 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2596 - 2600 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2596. நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும்
இரங்கு தீம் குழலும் ஏங்கக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்பப்
பரந்த வாள் நெடுங் கண் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல
அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித்தாளே

விளக்கவுரை :

2597. கடல் படை மன்னர் தம்மைக் காதலின் விடுத்துக் காமன்
தொடுத்த கோல் மார்பில் தங்கத் தூமலர்க் கொம்பு அனாளை
வடித்த இன் அமிர்தின் ஆரப் பருகலின் மழைக் கண் செவ்வாய்
துடித்து வண்டு உண்ணத் தூங்கும் செந் தளிர் ஒத்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2598. இளைமை அம் கழனிச் சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி
வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்திக்
கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம
விளை பயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ

விளக்கவுரை :

விசயமா தேவியார் துறவு

2599. நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய்ப் பில்கி அழல் விம்மிப்
போர் ஏந்திப் பூ அணிந்து புலவு நாறும் புகழ் வேலோன்
கார் ஏந்து இடி முரசம் ஆர்ப்பப் காய் பொன் கலன் சிந்திப்
பார் ஏந்திச் செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே

விளக்கவுரை :

2600. விண் பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி
மண் பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கிப்
பண் பால் வரிவண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books