சீவக சிந்தாமணி 2601 - 2605 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2601 - 2605 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2601. அடிசில் கலம் கழீஇக் கருனை ஆர்ந்த இள வாளை
மடுவில் மதர்த்து உணரா வாழைத் தண்டில் பல துஞ்சும்
நெடு நீர்க் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து
வடி நீர் நெடுங் கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே

விளக்கவுரை :

2602. அல்லி அரும் பதமும் அடகும் காயும் குள நெல்லும்
நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள்
வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல் கண் விசயையே

விளக்கவுரை :

[ads-post]

2603. தனியே துயர் உழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடு காட்டுள்
இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்தி உயக் கொண்ட
கனியார் மொழியாட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி
முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள்

விளக்கவுரை :

2604. வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆகச் சொரிந்து ஊட்டப்
பண்ணிப் பரிவு அகன்றாள் பைந்தார் வேந்தன் பயந்தாளே
அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால்
வண்ணச் சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன்

விளக்கவுரை :

2605. தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளைப்
பீடு ஆர் பெருஞ் சிறுவர் பயந்தீர் வம்மின் எனப் புல்லி
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறிக்
கோடாக் குரு குலத்தை விளக்கிட்டாளை விளக்கினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books