சீவக சிந்தாமணி 3081 - 3085 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3081 - 3085 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3081. புணரி போல் சிறு புன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார்
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கிலத் தியானம் என்னும்
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழப் பட்டார்

விளக்கவுரை :

3082. காதிப் போர் மன்னர் வீழக் கணை எரி சிதறி வெய்யோன்
ஓதிய வகையின் ஒன்றி உலகு உச்சி முளைத்ததே போல்
வீதி போய் உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி
ஆதி அந்த அகன்ற நான்மைக் கொடியெடுத்து இறைமை கொண்டான்

விளக்கவுரை :

[ads-post]

3083. பசும் பொனின் உலகில் தேவர் பயிர் வளை முரசம் ஆர்ப்ப
அசும்பு சேர் களிறு திண்தேர் அலை மணிப் புரவி வேங்கை
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார்

விளக்கவுரை :

3084. நறு மலர் மாலை சாந்தம் பரூஉத் துளித் துவலை நல்நீர்க்
கறை முகில் சொரியக் காய் பொன் கற்பக மாலை ஏந்திச்
சிறகு உறப் பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி
நிறை கடல் விஞ்சை வேந்தர் நீள் நில மன்னர் சேர்ந்தார்

விளக்கவுரை :

3085. விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல்
மண் எலாம் பைம் பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி
எண் இலாத் தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடிக்
கண் முழுதும் உடம்பில் தோன்றிச் சுதஞ்சணன் களிப்புற்றானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books