சீவக சிந்தாமணி 2826 - 2830 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2826 - 2830 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2826. பால் கதிர்த் திங்கள் கொட்பின் பருமித்த களிறு போல
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால்
காற்கு ஒசி கொம்பு போலக் கை தொழுது இறைஞ்சி மாதோ

விளக்கவுரை :

2827. தொடிக் கையால் தொழுது வாழ்த்தித் தூமணி நிலத்துள் ஏற்றிப்
பொடிப் புனை துகிலின் நீக்கிப் புகழ்ந்து அடி கழீஇய பின்றை
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார்
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே

விளக்கவுரை :

[ads-post]

2828. ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த
இன்பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
துன்பு உற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா

விளக்கவுரை :

தானப் பயன்

2829. கூற்று நா அலறுவது அனைய கூர் இலை
ஏற்ற நீர்த் துளும்பு வாள் இறைவ ஈங்கு இனிப்
போற்றினை கேள்மதி பொரு இல் புண்ணியர்க்கு
ஆற்றிய கொடைப் பயன் அறியக் கூறுவாம்

விளக்கவுரை :

2830. கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து
அடுத்து வார் மயிர்த் துதி அலற ஊதலின்
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல்
இடைக் கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books