சீவக சிந்தாமணி 2736 - 2740 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2736 - 2740 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2736. கைப்பொடி சாந்தம் ஏந்திக் கரக நீர் வீதியில் பூசி
மைப்படு மழைக் கண் நல்லார் மணிச் செப்பின் வாசம் நீட்டச்
செப்பு அடு பஞ்ச வாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு
ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான்

விளக்கவுரை :

அறிவர் சிறப்பு

2737. ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டித்
திரு விழை துகிலும் பூணும் திறப்படத் தாங்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

2738. நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
பொற்ற தாமரையினாளின் பூஞ் சிகை முத்தம் மின்னக்
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில்
மற்று அவன் மகிழ்ந்து புக்கு மணி முடி துளக்கினானே

விளக்கவுரை :

2739. கடி மலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து
அடி மலர் சூடியவர் உலகில் யாரே
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த
வடி மலர் தூவ வருகின்றார் அன்றே

விளக்கவுரை :

2740. முத்து அணிந்த முக் குடைக் கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
நித்தில வெண் குடைக் கீழ் நீங்காதார் அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books