சீவக சிந்தாமணி 2676 - 2680 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2676 - 2680 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2676. சுரும்பு நின்று அறா மலர்த் தொங்கலார் கவின்
அரும்பு கின்றார் கடல் அமிர்தமே எனா
விரும்பு கின்றான் இளவேனில் வேந்தன் ஐஞ்
சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே

விளக்கவுரை :

2677. குழை முகம் இடவயின் கோட்டி ஏந்திய
அழல் நிறத் தேறல் உள் மதி கண்டு ஐ என
நிழல் முகப் பகை கெடப் பருகி நீள் விசும்பு
உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள்

விளக்கவுரை :

[ads-post]

2678. பருகினேற்கு ஒளித்து நீ பசலை நோயொடும்
உருகிப் போய் இன்னும் அற்று உளை என்று உள் சுடக்
குருதி கண் கொளக் குணமாலை ஊடினாள்
உருவத் தார் உறத் தழீஇ உடற்றி நீக்குவான்

விளக்கவுரை :

2679. நங்கை நின் முக ஒளி எறிப்ப நல்மதி
அங்கு அதோ உள் கருத்து அழகின் தேய்ந்தது
மங்கை நின் மனத்தினால் வருந்தல் என்று அவள்
பொங்கு இள வன முலை பொருந்தினான் அரோ

விளக்கவுரை :

2680. முன்பனி
கொங்கு விம்மு பூங் கோதை மாதரார்
பங்கயப் பகைப் பருவம் வந்து என
எங்கும் இல்லன எலி மயிர்த் தொழில்
பொங்கு பூம் புகைப் போர்வை மேயினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books