சீவக சிந்தாமணி 2581 - 2585 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2581 - 2585 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2581. வண்டு மேய்ந்து வரி முரல் பூஞ் சிகைக்
கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும்
உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால்
பண்டை ஊழியின் பார் மலி உற்றதுவே

விளக்கவுரை :

2582. செரு நாடு செஞ் சுடர் வேல் திருகு செம் பொன் கனை கழல் கால்
திரு நாடு தேம் பைந்தார்ச் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து
பெரு நாட்டு அருங் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது
ஒரு நாட்டு அரசு உணங்க உரவோன் கொற்றம் உயர்ந்ததே

விளக்கவுரை :

[ads-post]

2583. வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாயச்
சிலையவர் குரம்பை அங் கண் மான் இனம் சென்று சேப்ப
நிலை திரிந்து ஊழி நீங்கி உத்தர குருவும் ஆகிக்
கொலை கடிந்து இவறல் இன்றிக் கோத் தொழில் நடாத்தும் அன்றே

விளக்கவுரை :

2584. கதம் கனல் யானை நெற்றிக் கட்டிய பட்டமே போல்
மதம் கமழ் கோதை அல்குல் மனாக் கிடந்து இமைத்துக் காமப்
பதம் பல பார்க்கும் சாயல் பாவை மற்று அநங்க மாலை
விதம்படக் கருதி மாதர் விளைத்தது விளம்பல் உற்றேன்

விளக்கவுரை :

2585. ஈர்நதண் கோதை இளையார் குழாத்திடையாள் எம் கோன் அடி சேர்வல் என்று
ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் அடிகள் வந்து ஈங்கு அகன் கடை உளாள்
சார்ந்த சாயல் தட மா முலைத் தையல் வல்லே வருக என்றான்
சேர்ந்து மன்னர் முடி வைரவில் திளைக்கும் செம் பொன் செறி கழலினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books